“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ

681

தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில்  இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்  ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.”பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே ஜே ப்ரட்ரிக்,  இவருக்கு இது முதல்படம். எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே. ஜே.ப்ரட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் பூஜை இன்று காலையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

Advertisement