திருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..

1500

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு, பரபரப்பை கிளப்பி வரும் இவர், தனது நீண்ட நாள் காதலரை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணமாகிய கையோடு, தம்பதியினர் இருவரும், தேனிலவிற்காக கோவா சென்றுள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் குறித்து பூனம் பாண்டே அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளார். அதாவது, கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரையடுத்து, பூனம் பாண்டேவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமாகி 2 வாரமே ஆன நிலையில், காதல் கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.