அரபு அமீரகத்துக்கு போப் ஆண்டவர் வரலாற்றுப் பயணம்

599

அரேபிய தீபகற்பத்தில் உள்ள முக்கிய இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கிறிஸ்துவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.வாட்டிகன் நகரில் தலைமையகமாக கொண்டு செயல்படும் ரோமன் காத்தோலிக்க கிறிஸ்துவ அமைப்பின் தலைமை மதகுருவாக கருதப்படுபவர் போப் ஆண்டவர். அவர் முதன் முறையாக இஸ்லாமின் அடையாளமாக கருதப்படும் அரேபிய நாட்டுக்கு பயணம் செய்திருப்பது இரு பெரிய மதத்திற்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என உலக அரங்கில் எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரகத்துக்கு வந்த போப் ஆண்டவர் கூறிய செய்தியில் உங்களது சிறப்பான வரவேற்புக்கு எனது நன்றி, எங்கும் அமைதி பரவ வேண்டி இறையருளை பிரார்த்திப்போம். ஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்க உறுதியெடுப்போம் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of