அரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..!

3672

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகையும் எழுத்தாளருமான செரா நேதன் மெல்பர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்தில் தன் காதலருடன் காத்துக்கொண்டிருந்தார். அனைத்து இருக்கைகளும் காலியாக இருந்திருக்கின்றன.

ஆனால் காதலரின் மடியில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் பயணிக்கவிருந்த விமான நிறுவனத்தின் இரண்டு பெண் பிரதிநிதிகள் அவரிடம் வந்து தனித்தனி இருக்கையில் அமருங்கள்.இங்கு குழந்தைகளும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். அப்போதும் அவர் அப்படியே அமர்ந்திருந்ததால் தங்களது டீம் லீடரை அழைந்து வந்துள்ளனர்.

நீங்கள் இப்படி அமர்ந்ததன் மூலம் இங்கிருக்கும் பெற்றோரை அவமதிக்கிறீர்கள்” என்று கூறியிருக்கிறார். நடிகை செரா, டிராக் பேன்ட்டும் கிராப் டாப்பும் அணிந்திருந்தார்.

அதைப் பார்த்த அந்த டீம் லீடர் இந்த உடையைப் போட்டுக்கொண்டு நீங்கள் விமானத்தில் பயணிக்க முடியுமா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

போர்டிங் நுழைவாயிலிலிருந்து எழுந்து காத்திருப்பு அறைக்குச் செல்லுங்கள்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

விமான நிறுவனம் குறித்து நடிகை புகார்

அந்தச் சம்பவத்தின்போது தான் அணிந்திருந்த உடையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்த செரா, “நான் இந்த உடையை அணிந்ததற்காக விமான நிலைய ஊழியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டேன்.காதலரின் மடியில் அமர்ந்ததற்கும் கண்டனம் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் குழந்தைகளே இல்லை.

மேலும் அது பொதுவெளி, கிளப் இல்லை என்றும் எனக்குத் தெரியும். இந்த ஒட்டுமொத்த நிகழ்வு எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அவமானத்தையும் அளித்தது” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் குறிப்பிட்டு, பயணிகளை இதுபோலதான் நடத்துவீர்களா என்று விமான நிறுவனத்துக்குப் புகாரையும் அனுப்பியிருக்கிறார் செரா.

பதிலளித்த நிறுவனம்

”உங்களைத் தரக்குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறோம். பொது இடத்தில் காதலர் மடியில் அமர்வது சரியில்லை என்று ஊழியர்கள் கருதியுள்ளனர்.

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களின் காதலன் மிகவும் அதிர்ஷ்டசாலி. அந்த நேரத்தில் நீங்கள் தரக்குறைவான செயலில் ஈடுபடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.இதுபோன்ற செயல்கள் தனிப்பட்ட இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும். உங்களைத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்’ என்று அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

ஆடை விஷயத்துக்கு மட்டுமே செராவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது. விமான நிலையத்தில் அவர் நடந்துவிதத்துக்கு உலகம் முழுவதும் கடும் கண்டங்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of