கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கிய பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு

334

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக டெல்டா மாவட்டங்களில் 107 வீடுகள் புனரமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு களப்பணிகளில் ஒன்றான வீடுகள் புனரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட107 வீடுகளை பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்வு தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் நேற்று (08.03.19)  நடைபெற்றது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் ஆ.ஹாலித் முகமதுஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புறையாற்றினர். அதனை தொடர்ந்து தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட107 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாநில செயலாளர் A. அபுபக்கர் சித்திக், அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி M.M.S ஷேக் நசுருதீன், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் ஹாஜி M.S.M.முஹம்மது அபுபக்கர், கீழத்தெரு முஹல்லா தலைவர் ஹாஜி A. தாஜ்தீன், தமுமுக மாவட்ட தலைவர் S.அஹமது ஹாஜா, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் Er. E.K.N. மர்சூக் அஹமது மற்றும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.