சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்கள்.. – பட்டியலை தயார் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!

461

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அத்தகைய கருத்து வெளியிட்டவர்களின் பட்டியலை உடனடியாக தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (ஜன.22) விசாரணைக்கு வந்தது.

அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் பதிவிட்டு கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸாருக்கு நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்களை இன்று மதியத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of