20 ஆயிரம் ஆபாச இணைய தளத்திற்கு தடை – எங்கு தெரியுமா?

698

வங்கதேசத்தில் 20 ஆயிரம் ஆபாச இணையதளங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் டிக்டாக், பீகோ செயலிகள் மற்றும் 20 ஆயிரம் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான வங்க தேசத்தில் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

 

அண்மையில் அங்குள்ள தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இணையத்தில் அதிகம் தேடப்படுபவையில் ஆபாச தளங்கள் முதலிடத்தில் இருந்தன. மேலும் ஆபாச நடிகைகளின் புகைப்படங்கள், குழந்தைகள் ஆபாச இணைய தளங்கள் அதிகம் பார்க்கப்படுவதும் தெரியவந்தது.

இது தவிர டிக்டாக், பீகோ போன்ற செயலிகள் மூலமும் ஆபாச வழிநடத்தல் அதிகம் இருந்தன. இதையடுத்து ஆபாச இணையதளங்களுக்கு தடைவிதிக்குமாறு வங்க தேச நீதிமன்றம் நவம்பரில் உத்தரவிட்டது. அதன்படி டிக்டாக், பீகோ மற்றும் 20 ஆயிரம் ஆபாச இணையதளங்களுக்கு வங்க தேச தொலைத்தொடர்புத்துறை தடை விதித்துள்ளது.

வங்கதேச தொலைதொடர்புத்துறை அமைச்சர் முஸ்தபா ஜாபர் கூறியது:

வங்கதேச மக்களுக்கு பாதுகாப்பான இணைய தள பயன்பாட்டை தர வேண்டியது எங்களின் கடமை. குறிப்பாக பாலியல் வன்முறை நோக்கத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டியுள்ளது. இதனால் சில இணையதளங்களை தடை செய்துள்ளோம். சில இணையதளங்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றன. அவற்றை தடை செய்யவும் முயற்சித்து வருகிறோம் என்றார்.

டிக்டாக், பீகோ செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்போன்ற பிற செயலிகள் மூலம் சிலர் ஆபாச நடவடிக்கைகளை தொடர்கின்றனர். மேலும் பேஸ்புக் போன்றவற்றின் மூலமும் ஆபாச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பேஸ்புக், யூடியூப் பக்கங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

தவறான பாதையில் செல்வோர் மற்றும் அழைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கதேச இணையதள நிறுவன கூட்டமைப்பு செயலர் எம்டாடுல் ஹாக் கூறும்போது, நாங்கள் பல இணைய தளங்களை தடை செய்துள்ளோம்.

இருப்பினும் மாற்று நுழைவு வழிகள் மூலம் பலர் பயன்படுத்துகின்றனர். அதை தடுக்க முயற்சிக்கிறோம் என்றார்.