ஆபாசபடம்.. இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி கைது

356

செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்  தேடப்பட்டுவந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டுமாவட்டம் செய்யூரைச்சேர்ந்த இளம்பெண் சசிகலாவை ஆபாசபடம் எடுத்து சிலர் மிரட்டியதால் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது. இந்த பிரச்சனையில் நைனார் குப்பம் பகுதியைச்சேர்ந்த திமுக நிர்வாகி தேவேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தேவேந்திரன் திமுக வில் இருந்து நீக்கப்பட்டார். பலவாரங்களாக தலைமறைவாக இருந்த தேவேந்திரனை கைது செய்ய செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையில் சென்னை வியாசர்பாடி பகுதியில்  தலைமறைவாக இருந்த தேவேந்திரனை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.  இந்த வழக்கில் ஏற்கெனவே தேவேந்திரனின் சகோதரர் புருஷோத்தமன் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of