தபால்துறை தேர்வு -பணித் தேர்வர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு..!

452

தபால்துறை தேர்வுகளில் இனிமேல் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Post Man, Multi Tasking Staff, Postal Assistant உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை இந்திய தபால் துறை நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கான கேள்வித்தாள்கள், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் இருப்பது வழக்கம்.

இந்நிலையில், அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி நடத்தப்படும் தேர்வுகளுக்கான வினாத்தாளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகள் மட்டுமே இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of