சென்னை முழுக்க ஆபாச போஸ்டர்…, விஜய் சேதுபதியின் அதிரடி

2968

ஆனந்தராஜ் இயக்கத்தில், தொலைக்காட்சி தொகுப்பாளர் அஸார் ஹீரோவாகவும், மனீஷா ஹீரோயினியாகவும், ஜே ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் “கடல போட ஒரு பொண்ணு வேணும்”.

இப்படத்தை காதலர் தினமான இன்று விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை முழுக்க விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அனைத்து வகையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்துக்கான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிடுவதாக தகவல் வெளியாகியது. இது அனைவரிடமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டரை வெளியிடுவது அவருக்கு பெருமை அல்ல அவமானம் என்றும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குநர் ஆனந்தராஜ் பேசுகையில்,

எனது முதல் படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இரண்டு வருட பழக்கம். நாங்கள் சீரியலில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவரிடம் நான் எந்த உதவியும் இதுவரை கேட்டதில்லை. முதல்முறையாக எனக்கு இந்த போஸ்டரை வெளியிட்டு உதவி செய்தார்.

தயாரிப்பு தரப்பில் சென்னை முழுக்க விளம்பரத்துக்காக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கும் எந்தவித தொடர்புமில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான காதல் படம் தான். யாருடைய மனதையும் அந்த விளம்பர போஸ்டர் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து விஜய்சேதுபதி கூறுகையில்,

அப்படி ஒரு விளம்பர போஸ்டரை படக்குழுவினர் ஒட்டுவார்கள் என்று எனக்குத் தெரியாது. படத்தின் இயக்குநரை அழைத்து கண்டித்தேன். இனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதையே நிறுத்திவிட வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. சிலர் வியாபாரத்துக்காகச் செய்கிற வேலை பலரது மனதையும் புண்படுத்துகிறது. உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம்” என்று கூறியுள்ளார்.

Advertisement