‘இப்படி பண்ணாதிங்க..’ கண்டித்த தலைமை ஆசிரியர்..! ஆசிரியைகள் செய்த சதி வேலை..?

787

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தவர் தங்கவேல்.

பணியில் சேர்ந்த நாள்முதல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த இவர், வேலை செய்யாமல் ஓப்பி அடித்த பல்வேறு ஆசிரியர்களை வெளுத்து வாங்கினார். இந்த நடவடிக்கைகள், ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகை ஆகிய 2 ஆசிரியைகளுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வேடசந்தூர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு 260 ரூபாயும், 9 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு 310 ரூபாயும், 11 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு 600 ரூபாயும் வசூலிப்பதாக தங்கவேல் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

மாணவர்கள் பெற்றோர்கள் நல கூட்டமைப்பு பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு, அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், இந்த போஸ்டரை அச்சடித்த அச்சகத்தின் மீதும், இதற்கு காரணமாக இருந்த ஞானம்பாள் மற்றும் ஞானம்பிகை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.