சுங்கத்துறை சோதனை ! சுமார் 1 கிலோ தங்கம் பவுடர் பறிமுதல்

325

இன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனையிட்டனர்.

அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது அவர் தங்கத்தை பவுடராக்கி பாக்கெட்டுகளாக உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 1 கிலோ 200 கிராம் ஆகும்.