ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவாகி உள்ளது

413

ஜப்பானில் ஜெபி புயல் ஏற்படுத்திய வடுக்கள் மறைவதற்கு முன்னரே, மற்றொரு இயற்கை சீற்றம், அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்காய்டோ தீவு பகுதியில், இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்துள்ளனர். உயிர்ச்தேசம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here