
இந்திய சினிமாவின் மைக்கல் ஜாக்சன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பிரபு தேவா. இவர் ஆரம்பத்தில் தன்னுடன் பணியாற்றிய பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டார்.
இதையடுத்து, இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, விவாகரத்து பெற்றனர். பின்னர், நயன்தாராவை காதலித்து வந்த நிலையில், அதுவும் பிரேக் அப் ஆகியது.
இந்நிலையில், இவருக்கு இரண்டாவது திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிசியோதெரபி மருத்துவரை தான் பிரபுதேவா திருமணம் செய்துக்கொண்டதாகவும், அந்த பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தகவல் கசிந்துள்ளது. ஆனால், இதுகுறித்து பிரபுதேவா அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை.