“பெற்றோரின் பிறந்த இடம் கட்டாயம் இல்லை..” என்.பி.ஆர். குறித்து பிரகாஷ் ஜவடேக்கர் பேட்டி..!

597

சர்ச்சைக்குரிய NPR பதிவேட்டில், பெற்றோரின் பிறந்த நாள், இடம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க கட்டாயம் இல்லை என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுடன், NRC-க்கு முன்னோட்டமாக கருதப்படும், தேசிய மக்கள்தொகை பதிவேடும் புதுப்பிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் நிலவும் நிலையில், பெற்றோரின் பிறந்த நாள், இடம் தொடர்பான கேள்வி நீக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

இந்தநிலையில், இதற்கு விளக்கம் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், NPR பதிவேட்டில் பெற்றோரின் பிறந்த நாள், இடம் தொடர்பான கேள்வி இடம்பெறும் என்றும், ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்க கட்டாயம் இல்லை எனவும் கூறினார்.

Advertisement