நாட்டில் தற்போது அவசர நிலையை விட மோசமான நிலையே நிலவி வருகிறது

533

நாட்டில் தற்போது அவசர நிலையை விட மோசமான நிலையே நிலவி வருகிறது என்று பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயக உரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது இந்த கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியதே இந்திரா காந்தியின் தோல்விக்கு காரணம் என்று கூறினார்.

ஆனால் தற்போது நாட்டில் அவசர நிலையை விட மோசமான நிலை நிலவி வருவதாக  கூறிய அவர் வரும் தேர்தலில் பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும்; மக்களுக்காக போராடுபவர்களை மத்திய அரசு தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதாகவும் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.