நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன் என்று  நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒவ்வொருவருக்கும் புது வருட வாழ்த்துகள்  ஒரு புதிய தொடக்கம் மற்றும் அதிக பொறுப்புணர்வு உள்ளது என்றும்,  வருகிற நாடாளுமன்ற 22தேர்தலில் உங்களது ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன் என்று அவர்  தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் குடிமகனின் குரல் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.