3 தொகுதி வாக்காளர் பட்டியலில் பிரகாஷ்ராஜ் பெயர் ?

410

அடிக்கடி அரசியல் பேசிவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் களத்தில் இறங்கினார். பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சுயேட்சையாக களத்தில் இறங்கி உள்ள அவருடைய பெயர் சென்னை வேளச்சேரி தொகுதி, பெங்களூரு சாந்திநகர் தொகுதி, தெலுங்கானா மாநிலம் சிரிலிங்கபள்ளி தொகுதி ஆகிய மூன்று தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்று கிரீஷ் குமார் நாயுடு என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தேர்தல் அதிகாரி, எங்கள் மனுவின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.