பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் எம்.பி. பிரக்யா சிங்..! கிளம்பிய சர்ச்சை..!

415

பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் பாஜக எம்.பி.பிரக்யா சிங் இடம்பெற்றுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியதாக பிரக்யா சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரக்யா சிங் மத்தியபிரதேசத்தின் போபால் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.

பிரக்யா சிங்கை வேட்பாளராக அறிவித்த போதே, பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையிலான பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், பாஜக எம்.பி. பிரக்யா சிங்கும் இடம்பெற்றுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குண்டு வெடிப்பு வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் பிரக்யா சிங், பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.