பிரணாப் முகர்ஜி, கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்தார்

298

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கருணாநிதி இறந்த போது அவரின் மறைவுக்கு தன்னால் வர முடியவில்லை என்று தெரிவித்தார். எனவே அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தற்போது கோபாலபுரம் இல்லம் வந்ததாக கூறினார்.

மேலும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார். ஒரு சிறந்த மாபெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது என்றார். கலைஞர் கருணாநிதிக்கும் தனக்கும் 48 ஆண்டுகாலம் நட்புறவு இருந்ததாகவும் பிரணாப் முகர்ஜி நினைவு கூர்ந்தார்.