கவலைக்கிடமாக இருக்கும் பிரணாப் முகர்ஜி

534

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜிக்க மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூளையில் ரத்தம் உறைந்து ஏற்பட்டு கட்டியை அகற்றுவதற்காக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மேலும் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement