‘பிராங்க்’ விடீயோக்களுக்கு தடை – யு டியூப்

503

விபத்துகள் அதிகரிப்பதால் இனி யு டியூபில் உயிரை பறிக்கும் ஆபத்தான பிராங்க் விடீயோக்களை அனுமதிக்க முடியாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

‘யு டியூபில் பிராங்க் விடீயோக்கள் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக துவங்கப்பட்ட ‘ஐஸ் பாக்கெட் சேலன்ஜ்’ தான் இது எல்லாவற்றிற்கும் ஆரம்ப புள்ளியாக அமைந்திருக்கிறது.

பிராங்குகள் ஆரம்ப காலத்தில் சந்தோஷமாக இருந்திருந்தாலும் பின்னர் விபரீதங்களாக மாறத்தொடங்கியது.

ஓடும் வண்டியில் இருந்து குதித்து நடனம் ஆடுவது, கண்ணை கட்டி கொண்டு வண்டி ஓட்டுவது போன்றவற்றை வீர சாகசங்களாக எண்ணி இளைஞர்கள் அதனை முயற்சி செய்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுகின்றனர்.

வைரலான பல பிராங்குகளுக்கு ‘யு டியூப்’ தான் முக்கிய இடமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உயிரை பழிவாங்கும் பிராங்குகள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக Fire Challenge; Tide Pod Challenge போன்றவற்றை அனுமதிக்க முடியாது; இனிமேல் இதுபோன்ற ஆபத்தான எந்தவொரு பிராங்குகளும் யு டியூபில் இனி இடம்பெறாது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of