கர்ப்ப காலத்தில் தலைகீழாக நின்ற அனுஷ்கா சர்மா..!

9198

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 2017 ஆம் ஆண்டு நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார்.

திருமணம் நடந்து மூன்று வருடமாகி, வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவுள்ளதால் கேப்டன் விராட்கோலி இந்திய- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று ஆட்டங்களில் பங்கேற்கவில்லை.

ரசிகர்கள் பல பேர் விராட் கோலி ஏன் கடைசி மூன்று ஆட்டங்களில் பங்கேற்கவில்லை என்று பல கேள்விகள் எழுப்பினர்கள். அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதால் விராட்கோலி பக்கத்திலே இருக்க வேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனைகளின்படி வீட்டில் இருந்து தன் மனைவியை கவனித்து கொண்டு வந்தார்.

இந்நிலையில் விராட் கோலி உதவியுடனும், சுவரின் உதவியுடனும் அனுஷ்கா சர்மா சிரசாசனம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அனுஷ்கா சர்மா கூறியதாவது.

யோகக் கலைக்கு முக்கிய பங்கு உள்ளதால் கர்ப்பமாவதற்கு முன்பும் அனைத்து யோக கலைகளை செய்தேன். தற்போது கர்ப்ப நேரத்தில் மருத்துவர்கள் பிறரின் உதவியுடன் செய்ய சொன்னதால் கணவரின் உதவியுடன் இதை செய்தேன்.

இணையம் வழியாக எனது யோக ஆசிரியரின் முன்னிலையில் இதை செய்தேன். கர்ப்ப நேரத்தில் கலை பயிற்சிகளை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Advertisement