உயிரோடு தூக்கிலிடப்பட்ட கர்ப்பமாக இருந்த பூனை..! – கேரளாவில் கொடூரம்..!

434

கேரளாவில் உயிரோடு கர்ப்பமாக இருந்த பூனையை தூக்கில் தொங்க விட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள குடோன் ஒன்றில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர் ஒரு இரும்புத் தூணில் கயிற்றை கட்டி, அதில் பூனையை தூக்கில் தொங்கவிட்டு யாரோ கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த அவர்கள் பூனையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த கொடூரர்களை வலை வீசி தேடி வருகின்றனர். அந்த குடோன் உள்ளூர் நபர்கள் கூடி மது அருந்த்க்கூடிய இடமாக உள்ளதால் யாரோ மது அருந்திவிட்டு இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Cat Hanged