ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா..? இது உங்களுக்கான பதிவு!

648

எல்லாரும் அவங்களோட குழந்தையை ரொம்ப சத்துள்ள ஒரு குழந்தையா வச்சிக்கனும்-னு தான் நெனைப்பாங்க. அதனால அந்த குழந்தை பிறந்ததும், அந்த குழந்தைக்கு சத்தான பொருட்களை கொடுப்பாங்க.

என்ன தான் இருந்தாளும், ஒரு குழந்தை அம்மாவோட கருவரையில் இருக்கும் போது கிடைக்குற சத்து தான், வாழ் நாள் முழுவதும் பயன்படும். எனவே அந்த தாய் சத்தான உணவுகள சாப்பிட்டா தான் அது சாத்தியம். தற்போது குழந்தைய சத்தாக பெற்றெடுப்பது எப்படி-னு நம்ம பாக்கலாம்..

  1. தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் இருந்தால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும்..

2.மாதவிலக்கு காலத்தில…கருப்பு உளுந்து..கருங்குருவ அரிசி..   நல்லெண்ணெய் ..முட்டை ஆகியவற்றை சாப்பிடுங்கள்

3.மாதவிலக்கு காலத்தில 2 அல்லது 3 நாட்கள் கட்டாயம் ஓய்வு எடுக்கனும். அதாவது குறைந்தது  18 மணி நேரமாவது ஓய்வு எடுக்கனும்

4.கட்டாயமா புகை, மது போன்ற பழக்கங்கள தம்பதியர் இருவருமே தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் தான்.

5.ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கு உடற்பயிற்ச்சி அவசியம்.. உடற்பயிற்ச்சியால தான் உடல் இயக்கங்கள் சீராகும்.கருத்தரிக்கவும் உதவும்

  1. சில ஆய்வுகளில் கூட அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாவுதாக சொல்லப்படுகிறது.பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில தயாரித்து குடிக்கலா.

7.அதுமட்டும் இல்லாம வீட்ட சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம்.. அதாவது டிடர்ஜெண்ட், பூச்சி கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாக இருக்குறது நல்லது.

8.உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும்.. அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.

  1. ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்க. தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

10.பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்

முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுது நல்லது

மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்

மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள்

வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்

அதுவும் செவ்வாழைப் பழத்தை சாபிடுவது மிகவும் நல்லது

பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது

ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்

பூண்டு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்..

இந்த விஷயத்த ரெகுலரா try பன்னி பாத்திங்கனா கண்டிப்பா இதுக்கான பலன பெறலாம்…

மேலும் இதுபோன்ற பல tips-அ தெரிஞ்சுக்க சத்தியம் டிவி யோட youtube channel ah subscribe செய்யுக…