சாதி மாறி திருமணம் – கர்ப்பிணிக்கு சகோதரர்கள் செய்த கொடூரம்!

780

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள பெட்மா பகுதி. இந்த பகுதியை சேர்ந்த குல்தீப்பும், புல்புல்லும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

குல்தீப் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், புல்புல்லின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே கர்ப்பமாகிய புல்புல், தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அம்மா, அப்பா, சகோதர்கள் கார்த்திக், சுபம் ஆகியோரைச் சந்தித்துவிட்டு கணவர் வீட்டுக்குத் திரும்பினார்.

தொடர்ந்து புல்புல்லின் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர்கள், புல்புல்லின் நெற்றியில் துப்பாக்கியில் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து அவர்களே பெட்மா காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of