பாலியல் வன்கொடுமைக்குள்ளான கர்ப்பிணி சிறுமி தற்கொலை – பரபரப்பு சம்பவம்

226

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கவரப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அவரது உறவினரான 22 வயது இளைஞர் ராம்கி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பாலியல் இச்சைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமானதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ராம்கியின் பெற்றோரிடம் சென்று கேட்டபோது அவர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், தனது புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தியடைந்த சிறுமி, குடும்பத்தாருடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மணப்பாறை காவல்நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சிறுமியை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ராம்கி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of