தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்..! கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

241

மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தாயும் குழந்தையும் இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசவ வலி ஏற்பட்ட பூஜாவை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் உடனே வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு தனியார் ஆம்புலன்ஸில் பூஜாவை தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரசவம் நடைபெற்று துரதிர்ஷ்டவசமாக தாயும், சேயும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரில் ஆம்புலன்ஸ் சேவைகள் கிராமப்புறங்களை எப்போதும் புறக்கணிப்பதாகவும், சரியான நேரத்தில் வந்திருந்தால் இரண்டு உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும் வேதனை தெரிவித்தனர்.