பிரசவ வலியில் துடித்த கீர்த்திகா..! மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்..!

368

ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மடை பகுதித்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி கீர்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிரசவவலி ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு மருத்துவர் இல்லாததால் அங்கு வேலை பார்க்கும் செவிலியரே பிரசவம் பார்த்துள்ளார். இதனால் அவருக்கு பிறக்க இருந்த ஆண்குழந்தை இறந்தே பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் கீர்த்திகாவும் உயிரிழந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செவிலியர் பிரசவம் பார்த்ததாலயே இருவரும் உயிரிழந்துவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை கைவிட வலியுருத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of