விமர்சித்த கட்சியுடனே கூட்டணி.., அடேங்கப்பா அந்தர் பல்டி

2068

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அதிமுக தலைவமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகின்றது.

இதில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகின்றது என்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறுகையில்,

தேமுதிக-வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும்.

மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தேமுதிக-வின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

தேமுதிக-வின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு எங்கள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுக-வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

எங்களுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் அனைத்தும் முயற்சித்து வருகின்றன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை.

விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். தே.மு.தி.க.விற்கு கிடைக்கும் இடங்களை பொருத்து கூட்டணி முடிவு இருக்கும்.

“ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை”. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தேமுதிக-வின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தேமுதிக தன் பலத்தை மற்ற கட்சிகளுக்கு நிரூபித்துக்காட்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of