சீமானின் பேச்சு..! அனைத்து கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்..! பிரேமலதா பளார்..!

268

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறினார்.

சீமானின் கருத்து ஏற்க முடியாத ஒன்று என்று கூறிய அவர், அதற்காக அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளையும் தான் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

டாக்டர் பட்டத்தை மலிவாக எல்லோரும் வாங்கி வருவதாக தெரிவித்த பிரேமலதா, முதலமைச்சர் என்ற அடிப்படையில் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.