துரைமுருகனை வம்பில் இழுத்து ஜெயலலிதா பாணியில் பேசிய பிரேமலதா

880

கேப்டனை தொட்டவர்களின் கதி என்ன என்பதை துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
vovt
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நம்மை எதிர்த்து போடியிடும் திமுக காங்கிரஸ் மக்களால் புறக்கணிக்கபட்ட கூட்டணி என்றும் தமிழின படுகொலைக்கு காரணமான திமுக காங்கிரஸ் தமிழக மக்கள் ஒரு வாக்கு கூட போட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

 

மேலும், கேப்டனை தொட்டவர்களின் கதி என்ன வென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிய பிரேமலதா, ஏன் வாயை திறந்தோம் என்று தற்போது துரைமுருகன் வேதனைபடுவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஜெயலலிதா பாணியில் பேசிய பிரேமலதா, வெற்றி தருவீர்களா.. தருவீர்களா… எனக் கூறி என்று வாக்கு சேகரித்தார்.

 

Advertisement