ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவர்னு சொல்லவே வெட்கப்படுகிறேன்! பிரேமலதா விளாசல்!

561

தென் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் அதிமுக சார்பாக போட்டியிடுகிறார், அவரை ஆதரித்து கூட்டணி கட்சியான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கண்ணகி நகரில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“இங்கு இருக்கக்கூடிய கண்ணகி நகர், எழில் நகர் இக்கட்டிடங்கள் எல்லாம் அம்மாவால் உருவானது.

ஆனால் இங்கு வந்த ஸ்டாலின், பொறாமை காரணமாக இப்பகுதியின் பெயரை கூட சொல்லாமல் சோழிங்கநல்லூர் என்று பொதுவாக சொல்லிவிட்டு போயிருக்கிறாரே.

இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா? அப்படிபட்டவர் பெயரை சொல்ல நான் வெட்கப்படுகிறேன். 20 வருஷமா உங்களை பார்க்க வராமல் இப்போது வந்திருப்பது தேர்தலுக்காகத்தான்.

ஆனால் ஜெயவர்தன் அப்படி இல்லை. தேர்தலில் ஜெயித்து வந்தால், 20 வருஷங்களுக்கு மேல் இப்பகுதியில் வசிப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of