ஸ்டாலினுக்கு கிடைத்த பட்டப்பெயர்! கடுமையாக விமர்சித்த பிரேமலதா!

735

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வர இருப்பதையொட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது பேசிய பிரேமலதா அமைச்சரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் அவருக்கு ஒரு புது பெயர் வைத்திருக்கிறோம்.

அது என்னவென்றால் குறை சொல்லும் புகழ்பெற்ற ஸ்டாலின் என கூறினார். அமைச்சரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என பிரேமலதா கூறியதால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement