விஜயகாந்தை போல் தான் எச்.ராஜாவும்! பிரேமலதா!

844

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, ராஜா விஜயகாந்தை போல தைரியமானவர் என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா.

அப்போது பேசிய அவர் விஜயகாந்தை போல் எச்.ராஜா மிகவும் தைரியமானவர். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார்.

எதற்கும் பயப்படமாட்டார். இப்படி தைரியமாக பேசும் ஆட்களிடம் உண்மை இருக்கும். ஆகவே ஊழல் திமுக கூட்டணியை ஒழித்துக்கட்டிவிட்டு மக்கள் இவருக்கு ஓட்டு போடுங்கள் என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of