தேமுதிக-வின் பொருளாளராக முதன் முறையாக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்

816

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், இதுவரை கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில், முதன்முறையாக பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.DMDK Press Release

இதேபோல், கட்சியின் அவை தலைவராக இளங்கோவன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of