பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி திமுக

381

பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி திமுக தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வரின் வெளிநாட்டு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமைய வேண்டும் என கூறினார்.

கச்சத்தீவு, ஸ்டெர்லைட், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் திமுக கையூட்டுப் பெற்று, கையெழுத்து போட்டுவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றம் சாட்டினார்.

பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால், அது திமுக தான் என்று பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக சாடினார். விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க அதிகமுவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement