தமிழிசைக்கு ஆளுநர் பதவி..! வாழ்த்து சொல்ல வந்து வசமாய் மாட்டிய பிரேமலதா..!

1251

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழிசை சௌந்திரராஜன் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, அணைத்துக் கட்சியினரும் கட்சி பாகுபாடு பார்க்கமால் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேமலதா, எங்க வீட்டு பக்கத்து தெருவுலதான் இருக்காங்க.

என்னுடைய பெஸ்ட் பிரண்ட் அவங்க ஆந்திராவின் ஆளுநராக’ பதவி கிடைச்சதற்கு முதல் வாழ்த்தை தெரிவித்திருக்கோம். கேப்டனும் போன்ல விஷ் பண்ணாரு. நாளைக்கு நாங்க நேர்ல போய் பார்த்து வாழ்த்து சொல்ல போறோம் என்று கூறினார்.

ஆனால் உண்மையில் சொல்லப்போனால் தமிழிசை சௌந்திரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தெரியாமல் இவ்வாறு சொன்னாரா அல்லது பரபரப்பு காரணமாக அப்படி சொன்னாரா என்பது பிரேமலதாவுக்கு தான் வெளிச்சம்.

ஒரு வேளை ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது பிரேமலதாவுக்கு தெரியாதோ. எது என்னவே இந்த விஷயம் ஆந்திர ஆளுநருக்கு தெரியாமல் இருந்தால் சரி.