பிரேம்ஜிக்கு டும்.., டும்.., டும்..,! “கேம் ஓவர்..,!” டுவிட்டரில் வெளியிட்ட நச் டுவீட்..!

703

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியுமானவர் பிரேம்ஜி. நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட இவர், அவரது அண்ணணின் எல்லா படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நீண்ட நாட்களாகவே திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று அடிக்கடி அவரிடம் கேட்டு வந்த நிலையில், தற்போது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆண் பெண் போன்ற பொம்மைப்படங்கள் திருமணக்கோலத்தில் இருப்பது போன்று, டீ சார்ட் ஒன்றை அணிந்துக்கொண்டு கேம் ஓவர் என்று பதிவிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த அவரது ரசிகர்கள், பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது என்றும், திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் கமென்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் ஆச்சரியத்துடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of