கஜா புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார் -ஆர்.பி.உதயகுமார்

578

சென்னை எழிலகத்தில், பேரிடர் கால முன்னறிப்பு தகவல் மையத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் 5 ஆயிரத்து 67 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறினார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியமானது என கூறினார்.

புயல் நிலவரங்களை உடனுக்குள் தெரிந்து கொள்ள புயல் அறிவிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், நாகை மற்றும் கடலூரில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

32 மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறிய அமைச்சர் உதயகுமார்,  பேரிடர் மேலாண்மைத்துறை 24 மணி நேரமும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்பில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  கஜா புயல் தொடர்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் எச்சரித்தார்.

 

Advertisement