காந்தி 150வது பிறந்ததினம்: ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

566

புதுடெல்லி: மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நம் நாட்டின் விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த
நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement