கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

181

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். காலை சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் மாலை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை தனி விமானத்தில் அவர் டெல்லி திரும்புகிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது