மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் – ஜனாதிபதி வழங்கினார்

99

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேரில் 58 பேருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார். நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் கடந்த 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேரில் 58 பேருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார்.

மீதமுள்ள நபர்களுக்கு வரும் 16-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அறுவைச் சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வி. ரமணி, இசைக் கலைஞர் “டிரம்ஸ்’ சிவமணி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், நடிகர் பிரபுதேவா ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.