குடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB

376

Citizenship (Amendment) Bill எனப்படும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாகவே வலம்வருகின்றது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பல காட்சிகள் போராட்டங்கள் நடத்தியும் வருகின்றன. இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பு கூடாது என 124 எம்.பி.க்களும் அனுப்ப வேண்டும் என 99 எம்.பி.க்களும் வாக்களித்திருந்ததால் 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

அதனை தொடந்து, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of