புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி!

192
puducherry

கடந்த திங்களன்று முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அக்கட்சியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததையடுத்து, நாராயணசாமி அரசு பெருபான்மையை இழந்ததாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதுச்சேரியில் குடியரத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரை நேற்று பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement