கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

247

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல் மந்திரியாக தேர்வு செய்ப்பட்டார்.

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் முதல் மந்திரி பதிவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக தொடர்ந்து 3-வது முறையாக பதிவியேற்றார்.

அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 6 மந்திரிகள் பதிவியேற்றனர்.

இந்நிலையில் டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில் உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார்

Advertisement