ஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்

139

ஜி-20 என அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி நாளை காலை 8 மணிக்கு கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை அடைகிறார். மதியம் 1.50 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவு 7 மணிக்கு குபேயில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

மேலும், ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of