பொதுமக்கள் வங்கி கணக்கில் பிரதமர் மோடி 15 பைசா கூட போடவில்லை

1042

கருப்பு பணத்தினை மீட்டு பொதுமக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் போடப்படும் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி 15 பைசா கூட போடவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய நாராயணசாமி, ரபேல் விமானம் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க இந்தியா தான் பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியதற்கு பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவதாக கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் 90 நாளிலேயே கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் 15 லட்சம் பணம் போடப்படும் என்று வாக்குறுதி அளித்து பிரதமரான மோடி, இதுவரை ஒருவர் வங்கி கணக்கிலும் 15 பைசா கூட போடவில்லை என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of