கேரள அனைத்துக் கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு

1207

கேரள அனைத்துக் கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டி உள்ளார்.

கேரளா மழை வெள்ளம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.