சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.

308

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தில் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வந்தனர். அந்த வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் 1708-ம் ஆண்டில் மறைந்தார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிடவுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி, இல்லத்தில் நடைபெறும் நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350 வது பிறந்தநாள் விழாவின் போது, அவரது நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of